இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் ஷாரூக் கான்! - Sri Lanka Muslim

இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் ஷாரூக் கான்!

Contributors

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் இடம்பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஹுருன் இந்தியா ரிச் எனும் புத்தகத்தின் 2ஆம் பதிப்பிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 1800 கோடி இந்திய ரூபாவுக்கு மேற்பட்ட சொத்து மதிப்பு கொண்டவர்கள் வரிசையில் ஷாரூக் கான் 114ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார்.

நடிகரும் ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் துணை உரிமையாளராளருமான ஷாருக்கானிடம் சுமார் 400 மில்லியன்  டொலர் (5,226 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான சொத்துக்கள் உள்ளது என கடந்த வியாழக்கிழமை வெளியான ‘ஹுருன் இந்தியா ரிச்’ பதிப்பு இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team