இந்திய பிரதமருக்கு நிகரானவன் நான் - மேர்வின் சில்வா - Sri Lanka Muslim

இந்திய பிரதமருக்கு நிகரானவன் நான் – மேர்வின் சில்வா

Contributors

qou60
இந்திய பிரதமர் வகிக்கும் அமைச்சர் பதவியை போன்ற அமைச்சர் பதவியையே தான் வகிப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

களனி தொகுதியில் பணியாற்றுவதற்காக இந்த வருடத்தில் 3 ஆயிரம் லட்சம் ரூபா பணம் கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மற்றும் எனது மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகள் கிடைத்துள்ளன. வாகனங்கள் இல்லாதவர்களுக்கு வாகனங்கள் கிடைத்துள்ளன.

எனினும் நான் பிறந்தது முதல் இருக்கும் பெலியத்த கிராமத்தில் உள்ள சொத்துக்கள் மட்டுமே எனக்கு இன்றும் உள்ளன.

நன்றி கொண்டவர்கள் என்னை விட்டு பிரிந்து செல்லவில்லை. எமது மக்கள் குழப்பமடைய தேவையில்லை. இடைநிறுத்தப்பட்டுள்ள களனியில் அபிவிருத்திப் பணிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

களனி பிரதேச சபையில் நடந்துள்ள விடயங்கள் தொடர்பில் சிலர் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.(LW)

Web Design by Srilanka Muslims Web Team