இந்திய பிரதித் தூதுவர் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்திப்பு - Sri Lanka Muslim

இந்திய பிரதித் தூதுவர் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்திப்பு

Contributors
author image

Editorial Team

 வட,கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியிலும் நீதிமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படுவதால் அங்கு கடமையாற்றுவதற்கு வசதியாக நீதிபதிகளுக்கு தமிழ் நாட்டு நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி உயர் ஸ்தானிகருடன் கலந்தாலோசித்து சீர்தூக்கிப் பார்க்குமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் அரிந்தம் பக்ஷியிடம் கேட்டுக்கொண்டார்.

 

இந்திய பிரதித் தூதுவராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள பக்ஷி நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று (26) வெள்ளிக்கிழமை முற்பகல் நீதியமைச்சில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

 

முன்னாள் பிரதித் தூதுவர் குமரன் தமது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பியதன் பின்னர், அரிந்தம் பக்ஷி பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை நீதிபதிகளுக்கு தற்பொழுது இந்தியாவின் போபால் நீதிபதிகள் பயிற்சி நிலையத்தில் சிறப்பாக பயிற்சி வழங்கப்படுவது குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

இலங்கையில் நிறுவப்படவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் சிங்ப்பூர், ஹொங்கொங் போன்ற நாடுகளின் நடுத்தீர்ப்பு மையங்களை ஒத்ததாக இருக்குமென்றும், அதன் மூலம் அண்மை நாடான இந்தியாவும் வர்த்தக தொழில்துறை ரீதியான பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வுகளை காண்பதற்கு வாய்ப்பாக இருக்குமென்றும் அமைச்சர் ஹக்கீம் பிரதித் தூதுவரிடம் கூறினார்.

 

மேலும் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

03

 

02

 

Web Design by Srilanka Muslims Web Team