இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கரின் தகப்பனார் காலமானார் » Sri Lanka Muslim

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கரின் தகப்பனார் காலமானார்

IMG-20180413-WA0048

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், கேஏ.எம். தைக்கா உமர், ஹாபிழ் கே.ஏ.எம். முஹம்மது உதுமான் ஆகியோரின் தந்தையாருமான குளம் அஹமது முஹ்யித்தீன் இன்று (13-04-2018) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் காயல்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (13-04-2018) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு காயல்பட்டினம் குத்பா சிறுபள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு குத்பா பெரியபள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்ககம் செய்யப்படுகிறது.

மறைவு செய்தி அறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மைத் துணைத்தலைவர் எம். அப்துர் ரஹ்மான் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.வை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மறைந்தவரின் மஃபிரத்துக்கு துஆ செய்தனர்.
நல்லடக்க நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் பங்கேற்கின்றனர்.

விழா ஒத்திவைப்பு
இன்று (13-04-2018) வெள்ளிக்கிழமை மாலை காயல்பட்டினம் காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30-வது ஆண்டு துவக்க விழா நடைபெறுவதாக இருந்தது. பொதுச்செயலாளர் அவர்களின் தந்தையாரின் மறைவையொட்டி நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிச்சுடர் இரங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவரும், மணிச்சுடர் நாளேட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் வெளியீட்டாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கரின் தகப்பானர் மறைவிற்கு மணிச்சுடர் ஆசிரியர், மேலாளர், ஊழியர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

IMG-20180413-WA0048

Web Design by The Design Lanka