இந்து மதத்தில் “ஹிஜாப்” » Sri Lanka Muslim

இந்து மதத்தில் “ஹிஜாப்”

face

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களின் போதனைகளில் காணப்படும் பெண் ஒழுக்க ஒற்றுமைகள்..!

*இந்து* மதத்தில் “ஹிஜாப்”
“உனக்காக படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு.
உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள்.
பார்வையை மேல் நோக்காதே.

அது உன் பாதத்தை நோக்கி இருக்கட்டும்.
பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக்கொள்.
(ரிக் வேதம் நூல்:8 வேதவரி:33. மந்திரம்:19)

*இஸ்லாத்தில்* “ஹிஜாப்”
முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக,அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்,தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,தங்கள் அலங்காரத்தை அதனின்றும் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர,(வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்”
(அல் குர்ஆன் 24:30)

*வேதாகமத்தில்(Bible)* “ஹிஜாப்”

“தூதர்களினிமித்தம் பெண்கள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்”
(1 கொரிந்தியர் 11:10)

“ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ண வெளியே போயிருந்தபோது தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது,ஒட்டகங்கள் வரக்கண்டான்.ஒட்டகத்தில் வந்த ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை கண்ட போது…அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்”
(ஆதியாகமம் 24:62-65)

அனைத்து மதங்களிலும் பெண்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கருதி ஹிஜாப் எனும் கவசத்தை பேண வேண்டும் என்னும் தொனியில்தான் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

உலகத்தாரே!

உண்மையை உணருங்கள்,
ஒருவர் மற்றவரின் மத நெறிகளுக்கு மதிப்பளித்து,
மானிடர் எனும் மாண்பு மிகு சகோதரத்துவத்தை உருவாக்கி நாளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டுவோம்! (அல்மசூறா நியூஸ்)

Web Design by The Design Lanka