இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது: 11 பேர் பலி - Sri Lanka Muslim

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது: 11 பேர் பலி

Contributors

qou148

-ஜகார்தா-

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள எரிமலையான சின்பங் கடந்த சில மாதங்களாக குமுறிக்கொண்டிருந்தது. எனவே இந்தோனேசிய அரசு, அப்பகுதியை சுற்றியிருந்தவர்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தது.

 

இந்நிலையில், இதன் சீற்றம் மேலும் அதிகரித்து இன்று காலையில் வெடித்து சிதறி குழம்புகளை கக்கியது. இதில் அப்பகுதியை சேர்ந்த 11 பேர் பலியாயினர். இது போன்று நடப்பது இதுவே முதல் முறை என மூத்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இன்னும் எரிமலை குழம்புகளை கக்குவதற்கு சாத்தியம் உள்ளதால், இந்த சமயத்தில் அப்பகுதி மக்களை வெளியேற்ற முடியாது என்றும் அந்த அதிகாரி கூறினார். பசிபிக் பெருங்கடலின் கடற்கரை பகுதியில் சதா உறுமிகொண்டுயிருக்கும் 130 எரிமலைகளில் சின்பங் எரிமலையும் ஒன்றாகும்.

 

இதற்கு முன்பு 2010ல் கொடிய எரிமலையான மெராபி வெடித்து சிதறியபோது அருகிலுள்ள யோக்யகர்தா நகரில் 350 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team