இந்தோனேசியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ விபத்து. - Sri Lanka Muslim

இந்தோனேசியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ விபத்து.

Contributors

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் காயமுற்றனர். ஆலைக்கு அருகே வசிக்கும் சுமார் 950 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு ஜாவாவில் உள்ள Balongan எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், நள்ளிரவுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த ஆலையில் ஒரு நாளைக்கு 125,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாகத் தேசிய எரிசக்தி நிறுவனமான Pertamina தெரிவித்தது.

தீ விபத்து ஏற்படும் போது கடும் மழை பெய்து கொண்டிருந்ததாகவும், மின்னல் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு தீ விபத்துக்குள்ளாகது என்பது இதுவரையில் தெரியவில்லை எனவும் எண்ணெய் வழிந்து தீ பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக Pertamina நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team