இந்த அரசாங்கம் நாட்டை பாரியளவில் கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளது!– ஐ.தே.க - மனித உரிமை ஆணைக்குழுவில் ஐ.தே.க 11 முறைப்பாடுகளைச் செய்துள்ளது! - Sri Lanka Muslim

இந்த அரசாங்கம் நாட்டை பாரியளவில் கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளது!– ஐ.தே.க – மனித உரிமை ஆணைக்குழுவில் ஐ.தே.க 11 முறைப்பாடுகளைச் செய்துள்ளது!

Contributors

இந்த அரசாங்கம் நாட்டை பாரியளவில் கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது,

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இந்த அரசாங்கம் பாரியளவு வட்டிக்கு கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிறக்காத குழந்தைகளையும் அடகு வைத்து இந்த அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடன் மற்றும் வட்டித் தொகைகளை செலுத்த நாட்டின் மொத்த வருமானம் போதுமானதல்ல.

இந்த அரசாங்கத்திற்கு கடன் வழங்க உலக நாடுகள் தயாரில்லை.

இதனால் அரசாங்கம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி வருகின்றது.

இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதனால் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் மூசடிகள் இடம்பெறுகின்றன.

போரின் பின்னர் அரசாங்கம் மக்கள் மீது பாரியளவில் பொருளாதார சுமையை திணித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐ.தே.க மனித உரிமை ஆணைக்குழுவில் 11 முறைப்பாடுகள் செய்துள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் பதினொரு முறைப்பாடுகளை செய்துள்ளது.

மாத்தறை மோதல் சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் 11 பேரினதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 5ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்து மாத்தறை பொலிஸார் 11 பேரை கைது செய்து தடுத:த வைத்துள்ளனர்.

இந்தக் கைதுகள் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புபடாதவர்களை மாத்தறை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு அப்பாவிகளை கைது செய்து தடுத்து வைத்திருப்பதனால் அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்ட்ள்ளதாகத் தெரிவித்துள்ளார்.lw

Web Design by Srilanka Muslims Web Team