இந்த அரசாங்கம் பௌத்த பிக்குகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை..! - Sri Lanka Muslim

இந்த அரசாங்கம் பௌத்த பிக்குகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை..!

Contributors
author image

Editorial Team

அரசாங்கம் அறிவுரைகளை கேட்கத் தவறினால் அதற்கும் தீர்வுகள் உண்டு என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். இனம் என்ற ரீதியில் நிர்க்கதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உப்பு நீரில் உருவாகின்றது, உப்பு கரைவதும் நீரில்தான் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மண் பற்றி மட்டுமன்றி கடல், ஆகாயம், ஜீவராசிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் பற்றியும் பரிந்துரைகள் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்கள் எம்முன் வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றத் தவறினால் அதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசாங்கம் பௌத்த பிக்குகள் முன்னிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக அளித்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என எல்லே குணவன்ச தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team