இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அனைத்து இன மக்களின் உரிமைகளுக்கும் நாம் மதிப்பளித்து செயற்படுவோம். » Sri Lanka Muslim

இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அனைத்து இன மக்களின் உரிமைகளுக்கும் நாம் மதிப்பளித்து செயற்படுவோம்.

Contributors

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்த கருத்துக்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை. தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக எதிர் தரப்பினர் கூறுவது முற்றிலும் பொய்யானது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே நாங்கள் மாகாண சபை முறைமையை அறிமுகம் செய்தோம். ஆனால் நல்லாட்சி அதனை அரசியல் காரணங்களுக்காக பிற்படுத்தியது.

கொரோனா தொற்று காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வெகு விரைவில் தேர்தலை நடாத்துவோம் என கருத்து தெரிவித்தார்.

Web Design by The Design Lanka