இனவாதம் தோற்றுப் போகும் ஆடை...!!! » Sri Lanka Muslim

இனவாதம் தோற்றுப் போகும் ஆடை…!!!

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

MI Sahir


சேலை ஆபாசமான ஆடை என்பது நிராகரிக்கப்பட வேண்டிய கருத்து. அபாயா ஆடை தொடர்பில் எதிர்வினையாற்றியதன் விளைவாக தோன்றிய குறிப்பிட்ட சாராரின் கருத்தே அது. ஆபாசம் என்பது அவரவர் அணிவதைப் பொறுத்தே அமையும்.

இங்கு மையப் பிரச்சினை, குறித்த பாடசாலையொன்றில் அபாயா அணிய வேண்டாம் என்ற விவாதமே. எவரும் விரும்பிய ஆடை அணியலாம். அது தனிநபர் உரிமை. எதை அணிய வேண்டும் எதை அணியக் கூடாதென இன்னுமொருவர் உத்தரவு பிறப்பிப்பதுதான் அப்பட்டமான அத்துமீறல், இனவாதம்.

இங்கு கேள்வி யாதெனில், அரசாங்கப் பாடசாலையொன்றில் குறித்ததொரு இனத்தின் கலாசார ஆடை மாத்திரம்தான் (குறிப்பாக பெண்களுக்கான ஆடை) அணிய வேண்டுமென்ற கோஷம் பல்லின சமூகம் வாழும் சூழலில் எந்தளவு நடைமுறைச் சாத்தியம்? இந்த கோஷத்திற்கு சட்ட ரீதியான அனுமதி ஏதும் உள்ளதா?
உண்மையில் சமூக நல்லிணக்கம் என்பது மற்றுமொரு இனத்தின் கலாசாரத்தை புரிந்து இணங்கிப் போவதிலே உள்ளது. அதைவிடுத்து எமது கலாசாரத்தை மற்ற இனத்தவர் மீது திணிப்பது இனவாத சிந்தனையின் வெளிப்பாடே ஆகும்.

முஸ்லிம் ஆண்/ பெண்களைப் பொறுத்தவரை ஆடை எதை அணிகிறோம் என்பதல்ல முக்கியம், எவ்வாறு அணிய வேண்டும் என்பதே முக்கியம். அதுவே இறைவனின் வழிகாட்டல்.

இந்த ஆடை விடயம் இனவாத சக்திகளின் வாய்க்கு அவல் கிடைத்தது போன்று விடாமல் இரு இனங்களின் நலன் விரும்பிகள் பொறுப்புடன் செயற்படுவதே அவசியம்.

ஒரு சிலர் தூரநோக்கற்று முகநூலில் பதிவிடும் தேவையற்ற பதிவுகளை தூரநோக்காக சிந்திப்பவர்கள்/ நடுநிலைவாதிகள்/ படித்தவர்கள் என்போர் எரியும் நெருப்புக்கு விறகு போடுவது போன்று அப்பதிவுகளை தூக்கிப்பிடித்து செயற்படுவது ஆரோக்கியமற்றது.

மானம் போனதன் பின்னர் எதை அணிந்து எதனைத்தான் பாதுகாத்து விடப் போகிறோம்?

#மரணத்தின் போது எல்லோருக்கும் பொதுவான ஆடை ஒன்றும் உள்ளது.
அங்காவது நிச்சயம் இனவாதம் தோற்றுப் போகும்.

Web Design by The Design Lanka