இனவாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முன்னர் ஹக்கீம் இனவாதத்தை கைவிட வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி - Sri Lanka Muslim

இனவாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முன்னர் ஹக்கீம் இனவாதத்தை கைவிட வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி

Contributors

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இனவதத்தை தடுக்கும் சட்டத்தை கொண்டு வரும் முன்னர் அவரது இனவாத வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.

கடந்த மாகாண சபைத் தேர்தல்களில் பிரசாரங்களில் ஈடுபட்ட அமைச்சர் ஹக்கீம் இனவாதத்தை தூண்டியதாகவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாதத்தை தூண்டி நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதை தடுக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் சட்டம் கொண்டு வரப் போவதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அவரது இந்த திட்டம் சிறந்தது எனினும் அவரும் இனவாதத்தை தூண்டி வருவதை முற்றாக நிறுத்த வேண்டும்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்டார்.

அவர் தனது இனவாத செயற்பாடுகளை கைவிட்டு முன்ணுதாரத்தை வழங்கி, அந்த சட்டத்தை கொண்டு வந்தால்தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். அவரது வரலாற்றை எடுத்துக் கொண்டால் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்து, இனவாதிகளுடன் செயற்பட்டு வந்துள்ளார்.

இதனால் அமைச்சர் ஹக்கீம் மேற்படி சட்டத்தை கொண்டு வரும் முன்னர், தனது இனவாத வேலைத் திட்டங்களை கைவிட்டு உரிய செயற்பாடுகளை முன்னெடுப்பார் என நாம் நம்புகிறோம் என்றார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team