இனி எஜமானிடம் பாஸ்போட்டை கொடுத்து சரணடைய தேவையில்லை ! - Sri Lanka Muslim

இனி எஜமானிடம் பாஸ்போட்டை கொடுத்து சரணடைய தேவையில்லை !

Contributors

சவுதி அரேபியா செல்லும் இலங்கைப் பணிப்பெண்கள், அங்கே ஒரு அடிமைகள்போல நடத்தப்பட்டு வருவதாக பலகாலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு மூலகாரணமே அவர்கள் அன் நாட்டிற்கு பணிப்பெண்களாகச் சென்றதும், முதல் வேலையாக அவர்களது இலங்கைப் பாஸ்போட்டை தமது எஜமானிடம் கையளிக்கவேண்டும் என்ற சட்டம் தான் என்று கூறப்படுகிறது.

 

இதனால் அவர்கள் சுயமாக எதனையும் செய்யமுடியாத ஒரு நிலை தோன்றியிருந்தது. அது தற்போது தளர்ந்துள்ளது.

 

இலங்கை அரசு, சவூதி அரேபியாவுடன் முக்கிய தொழில்சார் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) கைச்சாத்திட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தொழில்-இடம், கூடுதல் சம்பளம் மற்றும் உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு இந்த இருநாட்டு ஒப்பந்தம் அடிப்படையாக அமைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

 

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர்கள் தமது கடவுச்சீட்டை தமது எஜமானிடம் இனிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

 

Web Design by Srilanka Muslims Web Team