இன்னும் 03 வருடங்களுக்கு மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார். » Sri Lanka Muslim

இன்னும் 03 வருடங்களுக்கு மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார்.

20180112_210555

Contributors
author image

A.L.A. Rafeek Firthous

பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஸ்ரீ.ல.சு.கட்சியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்.
               -நிந்தவூரில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சூழுரை-


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நிந்தவூர்ப் பிரதேச சபையில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர்ப் பிரதேச அமைப்பாளரும், பிரதேச சபை வேட்பாளருமான வை.எல்.சுலைமா லெவ்வையையும், அவர் சார்ந்த குழுவினரையும் ஆதரித்து நேற்று மாலை (12)  நிந்தவூர் மாந்தோட்டத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டமொன்று இடம் பெற்றது.

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின்; உபதவிசாளருமான பீ.உமர்கத்தாப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி.சிறியானி விஜய விக்கிரம, முன்னாள் மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு, கருத்துக்களைத் தெரிவித்தனர்.
வேட்பாளர்களான வை.எல்.சுலைமா லெவ்வை, ஏ.ஏ.அமீர் அலி, எம்.எம்.சஹீல் ஆகியோரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-‘அல்லாஹ்வின் நாட்டம் யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் இன்னும் மூன்று வருடங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த சக்தியாலும் அவரை மாற்ற முடியாது. ஆனால், சிலவேளை இந்தத் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தூக்கி வீசப்படலாம், அமைச்சர்கள் றவூப் ஹக்கீம், பைசால் காசீம் தூக்கி வீசப்படலாம்.

ஆனால் ஜனாதிபதியை ஒன்றும் செய்ய முடியாது. அவர்தான் 03 வருடங்களுக்கு ஆட்சி செய்யப் போகிறார். அவரது தலைமையில்தான் ஸ்ரீ.ல.சு.கட்சி இருக்கிறது. மாகாண அதிகாரம், மத்திய அரசின் அதிகாரம், ஜனாதிபதியின் அதிகாரம் இவை அனைத்தையும் கொண்ட ஒரே கட்சி ஸ்ரீ.ல.சு.கட்சி மட்டுந்தான். இந்தக் கட்சியின் வெற்றியில்தான் அபிவிருத்திகள் யாவும் தங்கியுள்ளன. எனவே இந்த வாய்ப்பை நிந்தவூர் மக்கள் தவறவிடவேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டார்.

தேசியக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்:- ‘ மறைந்த தலைவர் அஷ்றப் நீலக்கட்சியின் பக்கம் இருந்து உரிமைகளை வெல்லுமாறு எமக்கு வழிகாட்டிச் சென்றார். நாம் இன்றும் அந்த வழியிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

ஆனால், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இன்று தலைவரின் பாட்டைப் போடுகிறர்கள், படத்தைப் போடுகிறார்கள். அவரது கொள்கை மண்ணளவேனும் கிடையாது. இன்று நமது வாக்குகளை வைத்து நமது தலைவிதியைத் தீர்மானிக்கத் தெரியாத மூடர்களாக, தேசியப் பட்டியல் பேயர்களாக மாறியுள்ளனர். நமது சமூகத்தைப் பாதுகாக்கக் கூடிய கொள்கைகளைக் கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வாக்களியுங்கள்’ எனத் தெரிவித்தார்.

20180112_205723 20180112_210555 20180112_224929

Web Design by The Design Lanka