இன்று திடீர் சுற்றிவளைப்பு அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஒலுவில் பிரதேச பல கடைகளுக்கு சீல்….!!! - Sri Lanka Muslim

இன்று திடீர் சுற்றிவளைப்பு அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஒலுவில் பிரதேச பல கடைகளுக்கு சீல்….!!!

Contributors

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஒலுவில் பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்றும்(30) அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது.

பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள் அறவிடுவது பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன தலைமையிலான குழுவில்
AHHM. நபார் (புலன் விசாரணை அதிகாரி),Z.M சாஜீத் (புலன் விசாரணை அதிகாரி),A. றிஸ்வான் (புலன் விசாரணை அதிகாரி),ASS. அஜ்மல் (புலன் விசாரணை அதிகாரி) கலந்து கொள்கின்றனர்.

இதன் போது பல களஞ்சியங்களில் அனுமதி பெறாமல் நெல் மூடைகள் காணப்பட்டன.

வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன இதன் போது தெரிவித்தார்.

ஒரு நெல் ஆலை உரிமையாளர் தனது களஞ்சியத்தில் உள்ள பல ஆயிரம் நெல் மூடைகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

( Riyas Ismail )

Web Design by Srilanka Muslims Web Team