இன்று தொடக்கம் எதிர்வரும் 19 வரை தேசிய கொடியை ஏற்றவும்-அரசு வேண்டுகோள் - Sri Lanka Muslim

இன்று தொடக்கம் எதிர்வரும் 19 வரை தேசிய கொடியை ஏற்றவும்–அரசு வேண்டுகோள்

Contributors

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டையொட்டி இன்று (14) தொடக்கம் எதிர்வரும் 19ம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அனைத்து அரச நிறுவன செயலாளர்கள் மற்றும் பிரதானிகளுக்கு அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.
அத்துடன், தனியார் நிறுவனங்களிலும் வீடுகளிலும் இக்காலத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களிடம் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team