இன்று நள்ளிரவு முதல் புகையிர வேலைநிறுத்தம்..! - Sri Lanka Muslim

இன்று நள்ளிரவு முதல் புகையிர வேலைநிறுத்தம்..!

Contributors

புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி அந்த சங்கத்தினால் பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை புகையிரத சேவைகள் இடம்பெறாது என்றும், புகையிரதத்திற்காக காத்திருக்க வேண்டாம் எனவும் புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நிலையப் பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான எந்த ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்யவில்லை என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலைமையினால் புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team