இன்று பாராளுமன்ற விவாதத்துக்கு வருகிறது உயித்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை - Sri Lanka Muslim

இன்று பாராளுமன்ற விவாதத்துக்கு வருகிறது உயித்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை இன்று ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இன்று ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம்முறை இல்லை எனினும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மார்ச் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறமாட்டாது.

Web Design by Srilanka Muslims Web Team