இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு வீதி சமிக்ஞைகள்..! » Sri Lanka Muslim

இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு வீதி சமிக்ஞைகள்..!

FB_IMG_1602654889743

Contributors
author image

Editorial Team

கொழும்பிலுள்ள வீதிகளில் இன்று (14) முதல் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் இயங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர், வீதி சமிக்ஞைகள் புதுப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்

பாணந்துறை – வில்லியம் சந்தி வரையிலான பாணந்துறை மொரட்டுவ, கட்டுபெத்த மற்றும் அங்குலான சந்தி என்பவற்றிலும் பொருப்பன சந்தி பெலெக்கடே சந்தி, மெலிபன் சந்தி, டெம்ப்லஸ் வீதி, தெஹிவளை மேம்பாலம், வில்லியம் சந்தி ஆகியவற்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகள் திருத்தப்பட்டு இயங்கவுள்ளன.

கொழும்பு – ஹொரணை வீதியின் பல இடங்களிலும் கொட்டாவ – பத்தரமுல்லை வீதியிலுள்ள சமிக்ஞைகளும் இவ்வாறு நவீனமயப்படுத்தப்பட்டு இயங்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka