இன்று முதல் QR முறைமையில் மட்டுமே எரிபொருள்! - Sri Lanka Muslim

இன்று முதல் QR முறைமையில் மட்டுமே எரிபொருள்!

Contributors

தேசிய எரிபொருள் அட்டை முறைமை இன்று (01) முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படுகின்றது.
எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரு வார காலம் உள்ளமையினால் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளுக்கான QR முறைமைக்கு செசி இலக்கத்தை கொண்டு பதிவு செய்ய முடியாத வாகனங்களை இவ்வாறு பதிவு செய்ய முடியும். QR முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 41 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 லட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team