இப்தார் நிகழ்வின் போது அக்கரைப்பற்று பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் 'பன' ஓதப்பட்டது » Sri Lanka Muslim

இப்தார் நிகழ்வின் போது அக்கரைப்பற்று பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் ‘பன’ ஓதப்பட்டது

town mosque akp

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-அமீருதீன்-


நாட்டில் தற்போது இடம் பெற்று வரும் அசாதாரண  சூழ்நிலையை   கருத்திற் கொண்டு இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் சமூக நல்லின இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்றது.

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ. உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாம், பௌத்தம், இந்து, கிரிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது நோன்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் சமூகங்களின் சமாதானம் தொடர்பாகவும் மௌலவி எம்.ஏ.  ரகுமத்துல்லா விளக்கமளித்தார். அத்தோடு மௌலவி லெத்தீப், சித்தீக் ஹபீஸ் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், டாக்டர் அப்துல் ஜப்பார், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பௌத்த மதகுரு பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் மஹ்ரிப் தொழுகையுடைய நேரத்தில் பள்ளிவாயலின் மிம்பருக்கு அருகில் இருந்து கொண்டு ‘பன’ ஓதுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது மாத்திரமல்லாது, பள்ளிவாயலுக்குள் இவ்வாறு நடந்து கொண்டமை ஏற்புடையது அல்ல எனவும் மார்க்கத்திற்கு முரணான விடயம் எனவும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிகழ்வு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

19212619_10212225566531060_879057024_o

19126047_10207424741657248_1368989737_o   19197504_10207424741017232_1743644229_o IMG_20170613_181234

Web Design by The Design Lanka