இப்படியொரு அமைச்சரவை இந்த நாட்டுக்குத் தேவைதானா ? - Sri Lanka Muslim

இப்படியொரு அமைச்சரவை இந்த நாட்டுக்குத் தேவைதானா ?

Contributors

அஸ்ரப் ஏ சமத்: இந்த நாட்டில் உள்ள அமைச்சர்களின்  மனைவியர்  செயலாளர், மகன் ஊடகச் செயலாளர், மகள் பொதுசன தொடர்பு அதிகாரி மருமகனுக்கு இன்னொரு பதவி இவ்வாறான பாரியதொரு அமைச்சரவை இந்த நாட்டுக்குத் தேவைதானா ?

இந்த அமைச்சர்களது சேவைகள் பொது மக்களுக்குச் செய்யப்படவில்லை. அவர்களது சொந்த குடும்பத்தாரர்களுக்கே அரச சேவைகள் செய்யப்படுகின்றன. இந்த அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் செலவாகும்  நிதியைக் கொண்டு இந்த நாட்டில் உள்ள மகாவலி திட்டம்போன்ற  மேலும் இரண்டு மகாவலித்திட்டங்களை செயல்படுத்த முடியும்.  என நீர்ப்பாசன மகாவலி பிரதியமைச்சர் டபிள்யு. ரீ.  ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரவில் மாமடுவே சுமங்கல பிரிவினையில் வைத்து நேற்று மகாவலி வாழ் மக்களது பிரதேச அபிவிருத்தி பற்றிய இணைப்புக் குழுக் கூட்டத்திலேயே பிரதியமைச்சர் பொதுமக்கள் மததியிலும் ஊடகங்களிலும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(lm)

Web Design by Srilanka Muslims Web Team