இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை- மனம் திறந்தார் பவித்ரா..! - Sri Lanka Muslim

இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை- மனம் திறந்தார் பவித்ரா..!

Contributors

தான் வகித்த சுகாதார அமைச்சுப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கவே இல்லை என தற்போது போக்கு வரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று மாலை நடந்த நிகழ்வில் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாழ்க்கையில் நடைபெறும் இவ்வாறான. விடயங்களை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதேவேளை இன்னும் 04 வாரங்களில் தடுப்பூசிப் பணிகளை முழுமைப்படுத்திக் கொண்டால் நாட்டை தற்போதைய பயங்கரமான சூழ்நிலையிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே சுகாதார அமைச்சுப்பதவி பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து மீளப்பெறப்பட்டு தற்போது பெருந்தோட்ட அமைச்சராக பதவி வகிக்கும் டொக்டர் ரமேஷ் பத்திரணவுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் எவருமே எதிர்பார்க்காத நிலையில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு அந்த அமைச்சுப்பதவி வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Web Design by Srilanka Muslims Web Team