இப்ராஹிம் என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நிதியை வழங்கினார்... இதற்காக அவர் 50 மில்லியனை செலவிட்டுள்ளார். - Sri Lanka Muslim

இப்ராஹிம் என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நிதியை வழங்கினார்… இதற்காக அவர் 50 மில்லியனை செலவிட்டுள்ளார்.

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இப்ராஹிம் என்பவரே நிதி உதவி வழங்கினார்

என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் என்ற நபர் தற்போது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்காக அந்த நபர் 50 மில்லியனை செலவிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது சகாக்களிடம் 30 மில்லியன் மீட்கப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர், அந்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் ஆனால் ஆனால் இஸ்லாமிய அரசினை உருவாக்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.எந்த நாடும் இந்த நிதியை வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இப்ராஹிமின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டார்கள் மகளும் தன்னை தெமட்டகொடையில் வெடிக்க வைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team