இப் புத்தகங்களை படித்துவிட்டீர்களா? » Sri Lanka Muslim

இப் புத்தகங்களை படித்துவிட்டீர்களா?

boo

Contributors
author image

Fauzer Mahroof

வட்டுக்கோட்டையிலிருந்து
முல்லைத்தீவு வரை
-சி.கா. செந்தில்வேல்

இலங்கையின் தேசிய இன முரண்பாடும், தேசிய இனங்கள் மீதான அடக்குமுறையும் 2009ம் ஆண்டுக்குப் பின் புதிய நிலவரமொன்றுக்குள் நுழைந்திருக்கிறது. இதனை எதிர்கொண்டு சுமக்கம் போகும் அடுத்த தலைமுறை இதுவரை காலமான அடக்குமுறைகளையும் அதற்கெதிரான போராட்டங்களையும் வரலாறாகத்தான் அறிந்து கொள்ளப்போகிறது.அவ்வாறு அத்தலைமுறை அறிந்து கொள்ளப்போகும் வரலாறு எந்த வரலாறாக இருக்கப் போகிறது? எவருடைய வரலாறாக இருக்கப் போகிறது?

ஒரு பக்கம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு- இன்னொரு பக்கம் இடதுசாரிப் பார்வையை முன்னிருத்திய போக்கு. இந்த நூல் பேசுவது தமிழீழக் கோரிக்கையின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மார்க்சிச அணுகுமுறையின் ஊடாக பார்ப்பதாகும்.
இந்த நூலின் ஆசிரியர், இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் கடந்த 52 வருடகாலமாக செயற்பட்டு வருபவர். முழு நேர அரசியல் ஊழியர், இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாகவும் போராகவும் முன்னெடுக்கப்பட்ட கடந்த 33 வருட காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் , சமுக வரலாற்றை படிக்க விளையும் ஒருவருக்கு இந்த நூல் முக்கிய பதிவாகும்.
————————————————–
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்
– சாந்தசீலன் கதிர்காமர்

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (1924- 1934) வரலாறு 1980ம் ஆண்டு எழுதப்பட்டு நூலாக வெளிவந்தது. சாந்தசீலன் கதிர்காமர் கொழும்பு, யாழ் பல்கலைக்கழகங்களில் நவீன வரலாறு மற்றும் சர்வேதேச அரசியல் துறைகளில் போதனாசிரியராக பணியாற்றியவர்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்தான் யாழ்ப்பாணத்தில் தோற்றம் கொண்ட தீவிரம் நிறைந்த இளைஞர் இயக்கமாகும். இந்த இளைஞர் காங்கிரஸ் பாரம்பரியமானது தேசிய இனப்பிரச்சினை விவகாரத்திலும், அது தொடர்பான விவாதங்களிலும் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது.ஆங்கிலத்தில் இந்த நூல் எழுதப்பட்டாலும், தமிழ், சிங்கள மொழிகளிலும் 1980களில் வெளியிடப்பட்டது.தமிழில் இப்போது அதன் திருத்தப்பட்ட மீள்பதிப்பு வெளிவந்துள்ளது.
———————————————-

வேட்கை, சிறைப் பயணக் குறிப்புகள்
பிள்ளையான் – (சிவா சந்திரகாந்தன்)

கடந்த இரு வருடங்களாக அரசியல் கைதியாக இருக்கின்ற சந்திரகாந்தன் தனது அனுபவங்களை எழுதியுள்ளார்.பதினைந்தாவது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்த இவர், 2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவின் போது அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார்.,2008ம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றார். 4 வருடங்கள் கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த அவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த போது, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

தான் இயக்கத்திற்கு சேர்ந்த காலப்பகுதி தொடக்கம், இயக்க கால வாழ்க்கை, விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு, பின் இரு தரப்புகளுக்குமிடையே நடந்த மோதல், முரண்கள், கிழக்கின் நிலைமை, தான் எதிர் கொண்ட நெருக்கடிகள், அரசியல் மாற்றங்கள், , என பல்வேறு தலைப்புகளில் தனது அனுபவங்களை கதை சொல்லும் மொழியில் எழுதியுள்ளார்.
———————————————–
கேரள டயரீஸ்
-அருளினியன்

ஈழத்திற்கும் கேரளாவிற்குமிடையிலான தொடர்பை, நூற்றாண்டுகளைத் தாண்டி தேடித் துவங்கும் ஒரு ஆய்வு எழுத்து இது. கேரளாவில் பயணம் செய்து, தான் பார்த்தவற்றை தமது வாழ்வோடும் மண்ணோடும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.ஈழத்தமிழர் பூர்வீகம் தொடர்பான தேடலில் தான் அறிந்தவற்றை சொல்லி இருக்கிறார். மாற்று பார்வை உள்ளோர் அதனையும் எழுத்தில் வைக்க இந்த நூல் தூண்டுகிறது.

லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால், ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும்.

எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .

Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், புதன்,வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

boo

Web Design by The Design Lanka