இம்புல்பே பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி - Sri Lanka Muslim

இம்புல்பே பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

Contributors

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழுள்ள இம்புல்பே பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சி உறுப்புரிமை பறிக்கப்படும் என ஐமசுமு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் நேற்று அறிவித்திருந்தார்.

எனினும் இம்புல்பே பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பிற்கு எதிராக 9 வாக்குகளும் ஆதரவாக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இம்புல்பே பிரதேச சபையில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண)

Web Design by Srilanka Muslims Web Team