இவ்வாண்டில் 1000 மாணவர்கள் அதிகப்படியாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்- UGC - Sri Lanka Muslim

இவ்வாண்டில் 1000 மாணவர்கள் அதிகப்படியாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்- UGC

Contributors
author image

Editorial Team

2013/ 2014 ஆம் பல்கலைக்கழக கல்வியாண்டில் இம்முறை 24,540 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

 

கடந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கபபட்ட மாணவர் தொகையை விடவும் இவ்வாண்டில் 1000 மாணவர்கள் அதிகப் படியாக உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை அந்தந்த கற்கைத் துறைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டன.

 

மாவட்ட மட்டத்திலான, தேசிய மட்டத்திலான புள்ளிகளின் அடிப்படையில் கற்கை நெறிகளைத் தொடர்வதற்காக மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் முதற்கட்ட பயிற்சி நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. 7ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இந்த முதல் கட்டப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

 

இரண்டாம் கட்டப் பயிற்சிகள் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையும், மூன்றாம் கட்டப் பயிற்சிகள் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது. இப்பயிற்சி நெறிகளில் 23,500 மாணவர்கள் பங்குகொள்வர்.

 

உயர்கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இந்த தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team