இம்ரான் கானை அழைத்து வரும் விமானத்திற்கு இந்திய அரசாங்கம் அனுமதி..! » Sri Lanka Muslim

இம்ரான் கானை அழைத்து வரும் விமானத்திற்கு இந்திய அரசாங்கம் அனுமதி..!

Contributors

இலங்கைக்கு இன்றைய தினம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அழைத்து வரும் விமானம் இந்திய வான் பரப்பில் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது.

இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka