இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு! பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு! - Sri Lanka Muslim

இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு! பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு!

Contributors

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தங்களது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரையும், பெண் நீதிபதியையும் கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து அவர் மீது அரசு அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னதாக அங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாத நீதிபதி சவுத்ரி முன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் இம்ரான் கான்.

ஆனாலும், இம்ரான் கானின் அவதூறு பேச்சுக்கு பாகிஸ்தான் மாஜிஸ்ட்ரேட் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது வீட்டின் முன் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இம்ரான் கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு அமளியில் ஈடுபடுவதை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் இம்ரான் கான் அரசாங்கம்  கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது.

இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார்.

சர்வதேச சதி காரணமாக தனது ஆட்சி பறிபோனது. மக்களின் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என சூளுரைத்த இம்ரான் கான், தொடர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்.

அவ்வாறு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தங்களது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரையும், பெண் நீதிபதியையும் கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து அவர் மீது அரசு அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team