இம்ரான் மகரூப் கல்விஅமைச்சரிடம் கோரிக்கை » Sri Lanka Muslim

இம்ரான் மகரூப் கல்விஅமைச்சரிடம் கோரிக்கை

imran

Contributors
author image

எப்.முபாரக்

இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் அவர்களிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கிண்ணியா, கந்தளாய், திருகோணமலை வலய கல்வி பிரிவில் உள்ள சில பகுதிகளை பிரித்து தம்பலகாம கல்வி வலயம் அதேபோன்று திருகோணமலை,திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் உள்ள சில பகுதிகளை பிரித்து குச்சவெளி கல்வி வலயம் என் இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

இதனை ஆராய்த அமைச்சர் உறிய நடவடிக்கை எடுக்குமாறு உறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka