இம்ரான் மஹ்ரூபின் முயற்சியால் பூவரசன்தீவு அல்மினா வித்யாலயத்துக்கு இரண்டு மாடி கட்டிடம் » Sri Lanka Muslim

இம்ரான் மஹ்ரூபின் முயற்சியால் பூவரசன்தீவு அல்மினா வித்யாலயத்துக்கு இரண்டு மாடி கட்டிடம்

FB_IMG_1523554836504

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

M.muzammil


பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிண்ணியா பூவரசன்தீவு அல்மினா வித்யாலயத்துக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது பாடசாலை நிர்வாகத்தாலும் அப்பகுதி பொதுமக்களாலும் பாடசாலையில் கட்டிட வசதி இன்மையால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிகாட்டி பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனால் இப்பாடசாலைக்கு புதிய இரண்டுமாடி கட்டிடம் ஒன்றை அமைத்து தரும்படி பாராளுமன்ற உறுப்பினர் கிழக்குமாகாண ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இப்பாடசாலையில் இரண்டுமாடி கட்டிடம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் இதன் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

FB_IMG_1523554820625 FB_IMG_1523554826267 FB_IMG_1523554836504

Web Design by The Design Lanka