இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது - Sri Lanka Muslim

இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது

Contributors

சர்­வா­தி­கார இரா­ணுவ ஆட்­சி­யினை உரு­வாக்கும் நோக்­கத்­தி­லேயே ஜனா­தி­பதி மாகாண சபை­க­ளையும் பிர­தேச சபை­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்றார். இரா­ணுவ சப்­பாத்­து­களின் கீழ் நாட்டை அடக்க நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என்று ஜே.வி.பி. யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.
வரவு செல­வுத்­திட்டம் தொடர்பில் இர­க­சிய வாக்­கெ­டுப்­பினை நடத்­தினால் அர­சாங்­கத்தின் உண்மை நிலைமை தெரியும். அமைச்­சர்­களே வரவு- செல­வுத்­திட்­டத்­திற்கு எதி­ராக வாக்­க­ளிப்பர் எனவும் ஜே.வி.பி.யினால் நேற்று பத்­த­ர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்

மாகாண சபை­க­ளுக்கோஇ பிர­தேச சபை­க­ளுக்கோ அதி­கா­ரங்­களைக் கொடுத்து நாட்டில் சம­மான ஆட்­சி­யினை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் விரும்­ப­வில்லை. இரா­ணுவ சர்­வா­தி­கார ஆட்­சி­யினை ஏற்­ப­டுத்தி ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குடும்ப ஆட்­சி­யினை முன்­னெ­டுத்துச் செல்லும் நோக்­கத்­திற்­கா­கவே அர­சாங்கம் மாகாண சபை மற்றும் பிர­தேச சபை­களின் அதி­கா­ரங்­களை கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது.

 

இரா­ணுவ ஆட்­சி­யினை நடை­மு­றைப்­ப­டுத்தி அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் பாது­காப்பு பிரிவின் கீழ் கொண்டு வந்தால் எவரும் எதிர்த்து கேள்வி கேட்க முடி­யாது. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட முடி­யா­தென்றே அர­சாங்கம் நினைக்­கின்­றது. இதற்கு இட­ம­ளித்தால் சிறு­பான்மை இனத்­தவர் மட்­டு­மல்ல சிங்­கள மக்­களும் வாழ முடி­யாது போய்­விடும்.
இரும்பு சப்­பாத்­து­களின் கீழ் நாட்­டையும் மக்­க­ளையும் அடக்கி நாட்டை சுடு­கா­டாக்க நாம் ஒரு­போதும் விட­மாட்டோம். அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் மக்­களை காப்­பாற்றும் நோக்­கத்­திற்கும் ஜே.வி.பி. தொடர்ந்தும் போராடும்.

 
மேலும்இ அர­சாங்­கத்­தினால் முன் வைக்­கப்­பட்­டுள்ள வரவு- செலவுத் திட்­டத்­தினை எவரும் ஆத­ரிக்­க­வில்லை என்­பதே உண்மை. எதிர்க்­கட்­சிகள் மட்­டு­மல்லஇ ஆளும் தரப்­பி­ன­ரி­டமும் இவ் வரவு செல­வுத்­திட்டம் தொடர்பில் உடன்­பா­டில்லை.
2014 ஆண்­டிற்­கான வரவு- செல­வுத்­திட்டம் தொடர்பில் பாரா­ளு­மன்றில் இர­க­சிய வாக்­கெ­டுப்­பினை நடத்­தினால் இது தொடர்­பான உண்மை நிலை புரியும். அமைச்­சர்­களே வரவு- செல­வுத்­திட்­டத்­திற்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்கள்.
அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்ட வரவு- செல­வுத்­திட்டம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லேயே தோல்வி கண்­டு­விட்­டது. இது அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யில்­லாத தன்மைஇ வரவு- செல­வுத்­திட்­டத்தில் எவ­ருக்கும் உடன்­பா­டின்மை என்­ப­தையே வெளிப்படுத்துகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குடும்ப அரசியலின் அச்சுறுத்தல்களினாலேயே பலர் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றனர். இதுவெகு காலத்திற்கு நிலைத்திருக்காது. வெகு விரைவில் மக்களே ஆட்சி மாற்ற மொன்றினை ஏற்படுத்துவர் எனவும் அவர் தெரிவித்தார்.(vk)

Web Design by Srilanka Muslims Web Team