இரட்டை சிம் வசதியினை கொண்ட Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி - Sri Lanka Muslim

இரட்டை சிம் வசதியினை கொண்ட Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

Contributors

Xolo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும் இரட்டை சிம் வசதியினையும் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

4 அங்குல அளவுடைய தொடுதிரை மற்றும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இக்கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 130 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team