இரணைத்தீவில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்..! - Sri Lanka Muslim

இரணைத்தீவில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்..!

Contributors
author image

Editorial Team

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைத்தீவு பகுதி மக்கள் இன்று (03) கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்யவுள்ளனர். இந்நிலையில், தற்போது அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைத்தீவு மக்களால் முன்னெடுக்கபடும் கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளதாக இரணை தீவு பங்குத் தந்தை அருட்திரு மடுத்தீன் பத்திநாதன் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team