இரணைத்தீவில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக கிளிநொச்சியிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

இரணைத்தீவில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக கிளிநொச்சியிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்..!

Contributors
author image

Editorial Team

கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது

குறித்த போராட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர்,அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள்பரிசீலைனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team