இரண்டாவது கொரோனா அலை : உக்ரேனிய விமான நிறுவனம் காரணமா? » Sri Lanka Muslim

இரண்டாவது கொரோனா அலை : உக்ரேனிய விமான நிறுவனம் காரணமா?

Contributors
author image

Editorial Team

இரண்டாவது கொவிட் 19 அலைகளை பரப்பிய பிராண்டிக்ஸ் கொத்தணியின் தோற்றம் துருக்கியில் இருந்து இலங்கைக்கு வந்த உக்ரேனிய விமானக் குழுவினரால் உருவாக்கப்பட்டது என்று புலனாய்வு துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

புலனாய்வுத் துறையினரின் அறிக்கையை பாதுகாப்பு ஆணையகத்தின் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளார்.

11 பேர் கொண்ட உக்ரேனிய குழுவினர் கடந்த செப்டெம்பர் 11 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
அதன்பின்னர் குறித்த 11 பேரும் சீதுவவில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுயதனிமைப்படுத்திக் கொண்டனர்.

எனவே, இந்த சூழ்நிலையில் விமான பணியாளர்களையும், குறித்த நட்சத்திர விருந்தகத்தின் ஊழியர்களையும் தனிமைப் படுத்தியிருக்க வேண்டும்.

விமான பணியாளர்களினால் தனிமைப்படுத்தப்பட்ட உக்ரேன் நாட்டவர்களில் ஒருவரு கடந்த செப்டெம்பர் 13 ஆம் திகதி கொவிட் தொற்று நேர்மறையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், விருந்தகத்தின் ஊழியர்களும், விமான பணியாளர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அங்கு விருந்தகத்தில் மொத்தமாக பணியாற்றும் பதினெட்டு பணியாளர்களில் 6 பேர் நாளாந்தம் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

அதேவகையில், கடந்த 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் அவர்கள் 18 பேரும் வீடுகளில் இருந்து பணிக்கு சமூகமளிப்பதற்கு பணிக்கப்பட்டனர்.

குறித்த பணியாளர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.

ஆனால் நட்சத்திர விருந்தகத்தின் நிர்வாகம் கொவிட் விதிகளை மீறி ஒரு குழு ஊழியர்களை வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளது.

அதில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பணியாளர்களை தினமும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் விருந்தகத்தின் சமையல்காரர் மற்றும் சலவை அதிகாரியும் உள்ளடங்குகிறார்.

இதுபற்றி பாதுகாப்பு ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குறித்த அணியினர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான காரணிகளாக இருந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது நாட்டில் 15 தொடக்கம் 18 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் அந்த எண்ணிக்கை 29 தொடக்கம் 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நட்சத்திர விருந்தகத்தின் பணியாளர்கள் பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தமையும், கொவிட் 19 தொற்று வேகமாக பரவுவதற்கு காரணமாக இருந்தமையும் கண்டறியப்பட்டது.

இலங்கை சனத்தொகையில் 29 தொடக்கம் 31 சதவீதம் மக்களுக்கு தொற்று பரவுவதற்கு பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் வைரஸ் தொற்றாளர்களே முக்கிய காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரேனிய பணியாளர்களால் வைரஸ் தொற்றுக்கு உள்ளான விருந்தக ஊழியர் ஒருவர் சிலாபத்திலிருந்து சீதுவவுக்கு தினமும் பொதுப் போக்குவரத்தில் வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி பிரேண்டிக்ஸ் நிறுவனத்தின் கொத்தணியில் இருந்த முதலாவது கொவிட் 19 தொற்றாளியான பெண்ணொருவர் இனங்காணப்பட்டார். குறித்த பெண் கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதியளவில் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதனையடுத்து கடந்த ஓக்டோபர் 5 ஆம் திகதியளவில் பிரேண்டிக்ஸ் கொத்தணி கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடந்த முறைகளை விட இரண்டு மூன்று மடங்குகள் விரியத்துடன் பரவ ஆரம்பித்தது.

இரண்டாவது அலையை ஆரம்பித்த பிரேண்டிக்ஸ் கொத்தணி, செப்டம்பர் 22 ஆம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வந்த 48 பேர் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், விசாகப்பட்டினத்தில் உள்ள பிரேண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்ந்து தென்னிலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

Web Design by The Design Lanka