இரண்டாவது வருடத்தில் கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் - Sri Lanka Muslim

இரண்டாவது வருடத்தில் கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள்

Contributors
author image

எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar

எம். எல். பைசால் காஷிபி
பொதுச்செயலாளர்
கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பு
(இத்திஹாதுல் உலமா )

இலங்கை அரபுக் கல்லூரிகளில் மார்க்க கல்வி கற்ற எமது ஆலிம்கள் சஊதி அரேபியா மற்றும் குவைத் , கத்தார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு உயர் கல்விக்காக அல்லது தொழில் முயற்சிக்காக சென்று தத்தம் நிலைகளில் உழைத்து வருகின்றனர் .

இவர்கள் பெற்றிருக்கும் அறபு மொழிப் புலமையுடன் கூடிய அறிவுக்கு அறபு நாடுகளே உரிய துறைகளில் அவர்களுக்கான தொழிலினைப் பெறுவதற்கான வாய்ப்பினையும் உயர் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தினையும் வழங்குகின்றன.

இலங்கையில் ஆலிம்கள் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும் அறபு நாடுகளில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தினை அவர்கள் பெரிதும் விரும்புவர் .
இதேவேளை இலங்கையில் பல துறைகளில் தம்மை ஈடுபடுத்தி தொழில் முயற்சிகளில் அவர்கள் முன்னின்று உழைத்த பொழுதிலும் அறபு நாடுகளை நோக்கி தொழில் பெற வருகின்றவர்களின் விகிதம் ஒப்பீட்டளவில் அதிகம் என்று கூறலாம் .

கடல் கடந்து வாழும் இலங்கை நாட்டு மக்கள் குறிப்பிட்ட நோக்கங்களை எட்டுவதற்காக சமூக சேவை அமைப்புகள், தஃவா அமைப்புகள் , விளையாட்டு கழகங்கள், துறை சார் குழுக்கள், மற்றும் பாடசாலைகளினதும், அரபுக் கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள் என சங்கங்களையும்,அமைப்புக்களையும் ஏற்படுத்தி சேவை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது .

இவ்வாறாண ஒரு நிலையினை ஏனைய நாடுகளை விடவும் கத்தார் நாட்டில் மிக அதிகமாக காணப்படுவதை அவதானிக்கலாம் . இதற்கு இந்த நாட்டின் புவியில் அமைப்பு முக்கிய காரணமாக இருக்கலாம் .

இந்நிலையில் ஆலிம்களை கொண்ட அமைப்பின் உருவாக்கத்தின் தேவை கத்தார் வாழ் இலங்கை அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கங்களினால் உணரப்பட்டு கத்தாரில் பணி புரியும் இலங்கை ஆலிம்களை மையமாகக் கொண்ட ” இத்திஹாதுல் உலமா ” “கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பு” اتحاد العلماء السريلانكين بدولة قطر”” “Sri Lanka Ulama Council “ என்ற பெயரில் கடந்த 2015 ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அரபுக்கல்லூரிகளின் பழைய மாணவர்கள் பிரதிதிகளால் உருவாக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .

இலங்ககைக்கு வெளியில் கல்வி கற்கின்ற மௌலவி மாணவர்கள் தமது பல்கலை கழகங்களை மைய்யமாகக் கொண்டு இலங்கை அமைப்பு என்ற பெயரில் இயங்கிய பொழு திலும் பரந்த அடிப்படையில் தொழில் முயற்சியில் ஈடுபடும் ஆலிம்களைக் கொண்ட சர்வதேச ரீதியான முதலாவது அமைப்பாக இதனைக் கூறலால் .

தமது வாழ் நாட்களில் பெரும்பாலான காலங்களை வெளிநாடுகளில் செலவு செய்வதனால் மார்க்க கல்வி கற்றவர்களின் வளங்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து பயணிப்பதற்கான ஓர் ஏற்பாடே இவ் “இத்திஹாதுல் உலமா” அமைப்பாகும் .

“இலங்கையின் தேசிய நலனிலும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அபிவிருத்தியிலும் பங்களிப்புச் செலுத்தக் கூடிய உலமா சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல்” என்ற தூர நோக்கினைக் கொண்டு இத்திஹாதுல் உலமா பயணிக்கின்றது.

வெளிநாட்டில் பணிபுரியும் எமது ஆலிம்களின் திறன்களை வளர்த்து, அவர்களிடையே நல்ல கருத்து ஒற்றுமையினை ஏற்படுத்தி, நாட்டிற்கு செல்கின்ற போது தாம் பெற்ற அனுபவத்தினைக் கொண்டு அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது இதன் உயர் இலட்சியமாகும்

இவ்வமைப்பு சென்ற வருடம் முதல் ஆலிம்களுக்கான சில செயற்திட்டங்களை முன்னெடுத்து திட்டமிட்ட அடிப்படையில் இயங்கி வருகின்றது.

கத்தார் வாழ் இலங்கை ஆலிம்களிடையே “ இத்திஹாத்” என்ற பெயரில் பிரபல்யம் பெற்று விளங்கும் இவ்வமையபின் பொதுச் சபையில் 450 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஓர் அமைப்பிற்குத் தேவயானை அனைத்து சட்ட திட்டங்களையும் வரைந்து நிருவாக ரீதியாக சிறந்த திட்டமிடலுடன் சூரா சபை மற்றும் உயர்சபை என அஸ்ஸெய்க் அவ்ன் அன்சார் இஸ்லாஹி அவர்களின் தலைமையினைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது .

கடந்த வருடம் மௌலவி மார்களை மையமாகக் கொண்டக் தொழில் வழிகாட்டல் மற்றும் தகவல் தொழிநுட்ப கருத்தரங்குகளை நடாத்தி தமது பணியினை முன்னெடுத்துச் செல்லும் இவ்வமைப்பு இலங்கையில் இருந்து கத்தார் நாட்டிற்கு வருகை தரும் ஆலிம்களையும் மற்றும் தஃவா அமைப்பின் பிரதிநிதிகளையும் , மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து சமூகத்தினதும் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களிலும் கருத்தாடல்களை செய்து வருகின்றமை இதன் செயற்பாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது .

கடந்த டிசம்பர் மாதம் மு.கா கட்சி தலைவர் கௌரவ அமைச்சர் ரஊ ப் ஹகீம் அவர்களை சந்தித்து நாட்டின் முக்கியத்துவம் கருதி அவரிடம் மகஜர் சமர்ப்பித்தமை முக்கியத்துவப்படுத்திப் பார்க்கப் படுகின்றது.

அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்துள்ள இவமைப்பின் ஆலிம்கள் இலங்கையின் தஃவா அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது சகல அமைப்புக்களும் ஏற்றுக் கொண்ட பொதுவான தஃவா விடயங்களை ஒன்றிணைந்து முன்னெடுக்குமாறும் இயக்க ரீதியாக பிரிந்து இஸ்லாமிய தஃவாப் பணியினை முன்னெடுப்பவர்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்த துணை நிக்குமாறும் வலிவுறுத்தி வருகின்றமை முக்கியத்துவப் படுத்திப் பார்க்கப்டுகின்றது.

இவ்வருடம் நிருவாக ரீதியாக பல உப குழுக்களை உருவாக்கி பல செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

தமிழ் பேசும் மக்களிடையே மார்க்கத்தினை தமிழ் மொழியில் முன்னவைப்பதற்காக கத்தார் “அல்கஸ்ஷாப்” பள்ளிவாசலில் குத்பா தொழுகையினைத் தொடந்து விசேட மார்க்க விளக்க வகுப்பினை ஏப்ரல் மாதம் முதல் முன்னெடுக்க அதன் தஃவா குழு வின் மூலம் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை பல்வேறு ஆளுமை விருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டு இயங்கி வருகின்றமையினை இங்கு நினைவிற் கொள்ளப் படுகின்றது .

மேலும் இலங்கை சமூகத்தினை முன்னிலைப்படுத்தி அமையப் பெற்றுள்ள சகோதர அமைப்புகளுடனும் சிநேக பூர்வாமான கருத்தாடல்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை முதன்மையாகப் பார்க்கப்டுகின்றது.

தஃவா செயற்பாடுகளை இலங்கை சமூகத்தினை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும் தஃவா இயக்கங்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களது அநுபவங்களை பெறுவதுடன் எதிர் காலத்தில் இவ்வமமைப்பின் பங்களிப்பு பற்றியும் ஆலோசனைகளைப் பெற்று சிறப்பாக இயங்கி வருகின்றது அல்ஹம்து லில்லாஹ் .

நாட்டிற்கு வெளியில் வாழ்ந்த பொழுதிலும் நாட்டின் முக்கியமான விடயங்களில் இவ்வமைப்பு தமது கருத்தினை செலுத்தி வருகின்றமை சிறப்புக்குரியதாக பார்க்கப் படுகின்றது

இலங்கை சென்று ஆலிம்கள் என்ற பெயரில் இயங்கும் போது இவ்வமைப்பின் மூலம் பெற்ற வழிகாட்டல்கள் , அறிவுரைகள் திறன் விருத்தி செயற்பாடுகள் என்பன இதில் அங்கத்துவம் பெறும் ஒவ்வொரு ஆலிமுக்கும் பெரிதும் துணைநிற்கும் என்பதே இந்த அமைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது .

அல்லாஹ் எமது செயற்பாடுகள் அவனுக்கு பொருத்தமானதாகவும் உளத்தூய்மையாகவும் இருக்க துணை நிற்பானாக

Web Design by Srilanka Muslims Web Team