இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பாத்திமா பஸ்ஹா வபாத் » Sri Lanka Muslim

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பாத்திமா பஸ்ஹா வபாத்

fat

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Rasmy Abu Rasheed Rila –


காலி கிந்தோட்டையைச் சேர்ந்த சிறுமி ( வயது 10) பாத்திமா பஸ்ஹா சென்ற வருடம் இரத்தப் புற்றுநோய்க்குள்ளான நிலையில் அச்சிறுமியின் வைத்தியச் செலவுகள் பற்றியும் அச்சிறுமியின் குடும்ப நிலை பற்றியும் கடந்த வருடம் குறித்த சிறுமியின் தாயின் வேண்டுகோளுக்கிணங்க சில ஊடகங்களும் முகநூல் பதிவர்களும் ( முக்கியமாக காலியை சேர்ந்த ரஸ்மி என்பவர்) இத்தகவலை பதிவிட்டதை அடுத்து பலரும் அவருக்காக துஆ செய்தும் பலவாறான நிதி உதவிகளையும் செய்து வந்தது பலரும் அறிந்ததே.

இந்நிலையில் இவரின் புற்று நோயின் தாக்கம் அதிகரித்ததால் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இச்சிறுமி இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இவர் இன்று வபாத்தாகி விட்டதாக விட்டதாக அறியக் கிடைத்தது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அச்சிறுமியின் மறுமை வாழ்க்ைகயை சிறக்கச் செய்வானாக. அப்பிள்ளையின் குடும்பத்துக்கு உயர்ந்த பொறுமையைக் கொடுப்பானாக.

Web Design by The Design Lanka