இரத்தினக்கல் அகழ்வுக்காக ஏல விற்பனை செய்யப்படவுள்ள ஆறுகள் - Sri Lanka Muslim

இரத்தினக்கல் அகழ்வுக்காக ஏல விற்பனை செய்யப்படவுள்ள ஆறுகள்

Contributors

இரத்தினக்கல் அகழ்வுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஆறுகள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக இரத்தினக்கல் அதிகார சபை தலைவர் திலக் வீரசிசங்க நேற்று தெரிவித்தார்.

களுகங்கை, வேகங்கை, ஹங்கமுவ கங்கை ஆகிய ஆறுகள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கிணங்க வேகங்கை நிவித்திகல டேல பாலம் முதல் எரபத்த வரையிலான சுமார் 50 முதல் மீற்றர் நீளமான 53 துண்டுகள் புத்தாண்டின் பின்னர் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில் இரத்தினபுரி மாவட்ட இணைப்பு குழுக் கூட்டம் நிவித்திகல பிரதேச இணைப்பு குழுக் கூட்டம் ஆகியவற்றின் தீர்மானத்திற்கிணங்க ஏல விற்பனை வெளிப்படைத் தன்மையுடையதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியோடு நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை மேற்படி இடங்களில் இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுவதால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படுகின்றது.

இப்பிரதேச தனியார் காணிகளில் பரவலாக சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுகங்கை, வேகங்ளை ஆகிய ஆறுகளின் சில பகுதிகள் தற்போது ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி நிருபர்)

Web Design by Srilanka Muslims Web Team