இரத்தினபுரியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் ஆரம்பம் » Sri Lanka Muslim

இரத்தினபுரியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் ஆரம்பம்

x.jpg2.jpg3

Contributors
author image

M.L.S. Mohammed - இரத்தினபுரி

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்ட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று (18) இரத்தினபுரி மாவட்ட செயலாளர் திருமதி மாலனி லொகுபோதாகம அவர்களின் தலைமையில் இரத்தினபுரி அலோசியஸ் பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தை முழுமையாக சுத்தப்படுத்தி மாணவர்களின் கற்றலுக்கான மிக ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தில் அலோசியஸ் பாடசாலையின் பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , இரத்தினபுரி மாநகர சபையின் ஆணையாளர் தலைமையிலான குழு, இரத்தினபுரி பொலிஸ் மற்றும் இரத்தினபுரி சுகாதார திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த பாடசாலையின் வளாகத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பரந்த அளவிளான சிரமதான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இரத்தினபுரி மாவட்ட செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற மேற்படி வேலைத் திட்டம் தொடர்பில் பெற்றோர்கள் அனைவரும் அரசிற்கு நன்றி தெரிவித்தனர் .

இதுவரை குறித்த பாடசாலையின் அதிபர் உட்பட 18 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் முக்கிய ஆசிரியர் ஒருவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பளனளிக்காத நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் மரணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .

x x.jpg2 x.jpg2.jpg3

Web Design by The Design Lanka