இராக்: ஐ.எஸ் வீழ்ச்சிக்குப்பின் நடக்கும் முதல் தேர்தல் » Sri Lanka Muslim

இராக்: ஐ.எஸ் வீழ்ச்சிக்குப்பின் நடக்கும் முதல் தேர்தல்

_101310958_c63022fa-e3d0-446f-9558-af69490a4dfa

Contributors
author image

BBC

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கெதிரான போரில் வெற்றியடைந்ததாக இராக் அரசு கடந்த வருடம் அறிவித்த பிறகு, முதல் முறையாக அந்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

329 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கிட்டத்தட்ட 7,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐ.எஸ் அமைப்புக்கெதிரான நான்கு வருட போருக்கு பின்னர் நாட்டை மறுகட்டமைப்பு செய்வதற்கு இராக் இன்னமும் போராடி வருவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் குறுங்குழுவாத மற்றும் பிரிவினைவாதத்தால் பலவீனமான நிலையுள்ள இராக்கில் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.

நாடுமுழுவதும் வாக்குப்பதிவுகள் கிரீன்விச் நேரப்படி 04:00 மணியளவில் தொடங்கிய நிலையில் கிரீன்விச் நேரப்படி 15:00 மணியளவில் முடிவடைந்துள்ளது.

தனது வாக்கை பதிவு செய்த பிறகு பேசிய இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி அனைத்து இராக்கியர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“தீவிரவாதத்தை தோற்கடித்த பிறகு இன்று இராக் சக்திவாய்ந்ததாகவும், ஒன்றுபட்டதாகவும் உள்ளது, அனைத்து இராக்கியர்களுக்கும் பெரிய சாதனை” என்று அவர் மேலும் கூறினார்.

ஐஎஸ் வீழ்ச்சிக்குப்பின் இரானில் நடக்கும் முதல் தேர்தல்படத்தின் காப்புரிமைAFP

இராக் வாக்காளர்களுக்கு வாக்களிக்க நிறைய தேர்வுகள் உள்ளன. குறிப்பாக ஷியா அல்லது சுன்னி தரப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் குர்துகளும் தனியே போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

ஐ.எஸ் அமைப்புக்கெதிரான போரில் மக்களிடையே நற்பெயர் பெற்ற ஆளும் ஷியா பிரிவினர் தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் நாட்டின் பாதுகாப்பு அதிகளவில் முன்னேறியுள்ளதாக கருதப்படுகிறது.

ஆனால், பல இராக்கியர்கள் அந்நாட்டு அரசாங்கத்தில் நிலவும் பரவலான ஊழல்கள் மற்றும் வலுவிழந்த பொருளாதாரம் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் மார்ட்டின் தெரிவிக்கிறார்.

இராக் அணு உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த சில நாட்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

Web Design by The Design Lanka