இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பில் அவதூறான செய்தி: ஊடகவியலாளர் விசாரணை » Sri Lanka Muslim

இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பில் அவதூறான செய்தி: ஊடகவியலாளர் விசாரணை

vijayakala1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் ஒருவரையே இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழுவினர் நேற்று (11) யாழ்.மாநகர சபையில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த செய்தி தொடர்பாக சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவித்ததை தொடர்ந்து இணையத்தள குற்றவியல் பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், நேற்று யாழ். நகர் வந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka