இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 24 காணிகள் மீளவும் உரிமையாளர்களிடம் கையளிப்பு - Sri Lanka Muslim

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 24 காணிகள் மீளவும் உரிமையாளர்களிடம் கையளிப்பு

Contributors

கிளிநொச்சியில் கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள பொழுது போக்கு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு காணி உரிமையாளர்களிடம் ஆவணங்களை கையளித்தனர்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் முகாம்களாக இருந்து பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 24 காணிகளே இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 22 காணிகளும், பூநகரியில் ஒரு காணியும் புதுகுடியிருப்பு பிரசேத செயலக விசுவமடு பிரதேசத்தில் ஒரு காணியும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இத்தோடு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறியகுடும்பங்களைச் சேர்ந்த 20 பேருக்கு வாழ்வாதார உதவியாக பால் மாடுகளும் வழங்கப்பட்டன.(lw)

Web Design by Srilanka Muslims Web Team