இராணுவ சிப்பாயின் தாக்குதலில் காயமடந்த நபர் மருத்துவமனையில் சேர்ப்பு. - Sri Lanka Muslim

இராணுவ சிப்பாயின் தாக்குதலில் காயமடந்த நபர் மருத்துவமனையில் சேர்ப்பு.

Contributors

தனிமைப்படுத்தலுக்காக பெந்தோட்டை விடுதியிலிருந்த நபர் மீது இராணுவச் சிப்பாய் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது.

குவைட் நாட்டிலிருந்து நாடு திரும்பிய சம்பத் எதிரிசிங்க என்பவர், தனிமைப்படுத்தலுக்காக பெந்தோட்டை விடுதியில் சேர்க்கப்பட்டனர்.

சுமார் மூன்றரை இலட்சம் ரூபா அவர் இதற்காக செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குருநாகல் – வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த விடுதியில் இருந்த நிலையில் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த தனிமைப்படுத்தலில் இருந்தவர், களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team