இருவர் கிணற்றில் விழுந்து மரணம் » Sri Lanka Muslim

இருவர் கிணற்றில் விழுந்து மரணம்

well

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆனந்த புரி பகுதியில் இளைஞர்கள் இருவர் கிணற்றில் விழுந்து இன்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் திருகோணமலை.தேவநகர் பகுதியைச்சேர்ந்த எல்.ஹேமதரன் (16வயது) மற்றும் கே.உமாசங்கர். புவிறாஜ் (15வயது ) எனவும் தெரியவருகின்றது.

நண்பர்கள் இரண்டு பேரும் பொதுக்கிணறொன்றில் விளையாட்டாக குளித்துக்கொண்டிருந்த வேளை கிணற்றுக்குள் பாய்ந்துள்ளார்.

அதேவேளை தலையோடு தலை பட்டு கிணற்றுக்குள் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த இருவரின் சடலங்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka