இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு! - Sri Lanka Muslim

இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

Contributors

Physics-Nobel-81013-150

ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்துக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்ஸுவா எங்கிலர் ஆகிய இருவருக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது. பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கும் ஏன் எடை உள்ளது என்பது குறித்து விளக்குவதற்கான ஒரு பொறிமுறையை 1960களில் பிரேரித்த பல பௌதீக விஞ்ஞானிகளில் இவர்களும் அடங்குவார்கள்.

இறுதியாக, சுவிட்சர்லாந்தில், செர்ன் என்னும் இடத்தில் அணுமோதலுக்கான பெரிய பரிசோதனைக் கூடத்தில் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போசன் (கடவுள் ) துகள்களை, அந்த பொறிமுறைதான் முதன் முதலில் எதிர்வு கூறியிருந்தது.

Web Design by Srilanka Muslims Web Team