இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை அதிகரிக்கும் கோரிக்கை நிராகரிப்பு..! - Sri Lanka Muslim

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை அதிகரிக்கும் கோரிக்கை நிராகரிப்பு..!

Contributors

உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ள மையால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் நுகர்வோர் அதிகார சபையினால் அது நிராகரிக்கப்பட்டதாக பால்மா இறக்குமதி யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையால் தங் களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

கப்பலுக்கான செலவு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவும் இதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team