இறக்குவானையில் புத்தர் சிலை உடைப்பு-ஒருவர் கைது! - Sri Lanka Muslim

இறக்குவானையில் புத்தர் சிலை உடைப்பு-ஒருவர் கைது!

Contributors

இறக்குவானை நகரிலுள்ள புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்குவானை பஸ் தரிப்பிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவரே இந்த புத்தர் சிலையை உடைத்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இறக்குவானை நகரிலுள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ள காணொளியின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில், எந்தவித இனவாத செயற்பாடுகளும் கிடையாது என்பது, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team