இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் சந்திப்பு - Sri Lanka Muslim

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் சந்திப்பு

Contributors

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (மார்ச் 26) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தமைக்காக ரஷ்ய தூதருக்கு ஜெனரல் குணரத்ன நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனில் ஐ ஷ்கோடா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரிவுக்கான மேலதிக செயலாளர் பிபிஎஸ்சி நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team