இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; வலுவான நிலையில் பாகிஸ்தான் - Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; வலுவான நிலையில் பாகிஸ்தான்

Contributors

இலங்கை அணிக்கு எதிரான முதுலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் யூனிஸ் கானின் சதம், அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கின் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குர்ராம் மன்சூர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இதேவேளை இரண்டாவது நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 59 ஓட்டங்கள் பெற்றிருந்த போது முஹம்மட் ஹபீஸ் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் அஹமட் செஷாட் 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பினன்ர் யூனுஸ்கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் 214 இணைப்பாட்டத்துடன் பாகிஸ்தான் அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்ற சிரேஷ்ட வீரர் யூனிஸ் கான் 136 ஓட்டங்கள் பெற்ற போது ஏரங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

இலங்கை அணி சார்பாக எரங்க, 2 விக்கெட்டையும் லக்மால் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Web Design by Srilanka Muslims Web Team